'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்! இவரா?

விஜய் புதிதாக நடித்துவரும் 'தளபதி 66' படத்தில் இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் இணைந்துள்ளார்.

Update: 2022-05-15 13:30 GMT

விஜய் புதிதாக நடித்துவரும் 'தளபதி 66' படத்தில் இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் இணைந்துள்ளார்.




இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடித்து வரும் படம் 'தளபதி 66' விரைவில் இப்படத்தின் டைட்டில் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.




இந்நிலையில் பாடல்களுக்குப் பெயர் போன விஜய் படத்தில் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஒரு பாடலுக்கு இயக்குனர் பிரபுதேவாவை நடனம் அமைக்க படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் பிரபுதேவா நடனம் இயக்கத்தில் விஜய் நடனமாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News