விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா ஷிவானி ?

Kollywood News.;

twitter-grey
Update: 2021-08-21 07:45 GMT
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா ஷிவானி ?

'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியானார் ஷிவானி நாராயணன்.




 


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.




 



இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது, இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 'பகல் நிலவு' என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன், பின்னர் பிக்பாஸ் மூலம் பிரபலமானார்.

Tags:    

Similar News