யூடியூபில் ஒரே நேரத்தில் ஹிட்டடித்த 'விக்ரம்' பாடல் மற்றும் ட்ரைலர்

ஒரே நேரத்தில் 'விக்ரம்' படம் 2 யூடியூப் சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

Update: 2022-05-20 01:00 GMT

ஒரே நேரத்தில் 'விக்ரம்' படம் 2 யூடியூப் சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.





இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடித்து வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் படம் 'விக்ரம்', இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் கடந்த வாரம் யூடியூப்பில் வெளியானது தற்பொழுது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் 'விக்ரம்' உள்ளது.




இப்படத்தில் வரும் முதல் சிங்கிலான 'பத்தல பத்தல' பாடல் தற்போது யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தில் மட்டும் கண்டால் பாடல் அதிகமாக பார்வையாளர்களை கடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் ட்ரெய்லர் 25 மில்லியன் பார்வைகளை கடந்து உள்ளது. விக்ரம் படத்தில் படமும், பாடலும் டிரெய்லரும் ஒரே நேரத்தில் விக்ரம் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் யூடியூபில் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகப் படுத்தியுள்ளது.

Similar News