'விக்ரம்' பட பாடல் - கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

மத்திய அரசை விமர்சித்து கமலஹாசன் எழுதி பாடியுள்ள விக்ரம் பட பாடல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-13 08:30 GMT

மத்திய அரசை விமர்சித்து கமலஹாசன் எழுதி பாடியுள்ள 'விக்ரம்' பட பாடல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'விக்ரம்', இப்படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியானது இந்த பாடல் வரிகளில் 'கஜானாலே காசில்லை... கல்லாலையும் காசில்லே... காய்ச்சல் ஜுரம் நிறைய வருது... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே... சாவி இப்ப திருடன் கையிலே தில்லாலங்கடி தில்லாலே...!' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.



இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது நடிகர் கமல் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'விக்ரம்' திரைப்படத்தில் 'பத்தல பத்தல' என்ற பாடல் மத்திய அரசை திருடன் என கூறும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலில் சாதி ரீதியான பிரச்சினைகள் தூண்டும் வகையில் பாடல் அமைந்துள்ளது, எனவே 'விக்ரம்' படத்தில் உள்ள பாடல் வரியை நீக்க வேண்டும் மேலும் மத்திய அரசை விமர்சித்து பாடல் வெளியிட்ட கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News