வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படம்.!

வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படம்.!

Update: 2021-01-12 19:50 GMT

தமிழ், மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் தமிழில் சாணி காயிதம் மற்றும் அண்ணாத்த, தெலுங்கு மொழியில் ரங் டே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பதி அருகே உள்ள புகழ் பெற்ற  அலமேலுமங்கபுரம் கோயிலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதன் பின்னர் அவர் மேக்கப் இல்லாமல் கோயில் முன்பாக ஒரு புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த படத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News