மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனின் முக்கிய அறிவிப்பு குறித்த வைரல் வீடியோ!

மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனின் முக்கிய அறிவிப்பு குறித்த வைரல் வீடியோ!;

Update: 2021-02-14 19:57 GMT

தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.மேலும் மாஸ்டர் திரைப்படத்தினால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாகவும், பாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் மாளவிகா மோகன் அவரது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நாளை காலை 10.30 மணிக்கு எனது அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு, ஒரு முழுமையான ஆக்ஷன் மற்றும் த்ரில் படத்திற்காக ரசிகர்கள் தயாராகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்த நிலையில்  அப்படம் குறித்த தகவலாக இருக்கும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வளைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Similar News