ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் ஹாலிவுட் படமா? - கசியும் தகவல்.!
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் ஹாலிவுட் படமா? - கசியும் தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ. ஆர் முருகதாஸ். அந்த வகையில் தளபதி விஜயை வைத்து வெற்றி படங்களை இயக்கியவர். இதன் வெற்றியை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65’ திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.
அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் ஒரு சில காரணங்களால் விலகிக் கொண்டார்.
இதனை அடுத்து இவரின் அடுத்த படம் என்னவென்று திரையுலகில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருந்தன. தற்போது ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இந்த படம் "தி லயன் கிங்" போன்ற முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
லைவ் ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் திரைப்படத்தை டிஸ்னி நிறுவனத்திற்காக ஏ.ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இதைப்பற்றிய முழுமையான தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று தெரிய படுகிறது.இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் தமிழ் இயக்குனர் ஒருவர் முதல் முறையாக ஒரு லைவ்ஆக்சன் மற்றும் அனிமேஷன் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் இதைப் பற்றிய தகவலை வெளியிடுங்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.