விமல் பட கதாநாயகி துணை இயக்குனரை மணந்தார் - குவியும் வாழ்த்துக்கள்!

விமல் பட கதாநாயகி துணை இயக்குனரை மணந்தார் - குவியும் வாழ்த்துக்கள்!

Update: 2021-01-08 16:55 GMT

தமிழ் சினிமாவில் 'கயல்' என்ற படத்தின் மூலம்  திரையுலகில் அறிமுகமானவர் ஆனந்தி.அதன் பின்னர் பரியேறும் பெருமாள்,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சண்டிவீரன், விசாரணை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு நேற்று சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனருடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலகினருக்கு இந்த திருமணத்தில் கலந்து கொள்ளஅழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மூடர் கூடம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் அவர்களின் மைத்துனர் தான் கயல் ஆனந்தி திருமணம் செய்த மணமகன் சாக்ரடீஸ் என்பது குறிப்பிடதக்கது. இவர் அலாவுதீனின், அற்புத கேமரா, அக்னிசிறகுகள் உள்ளிட்ட ஒரு சில படங்களில் இணை இயக்குனராக பணி புரிந்துள்ளார் என்றும் விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

துணை இயக்குனர் சாக்ரடீஸ் மற்றும் கயல் ஆனந்தி திருமணத்தை அடுத்து திரையுலகினர் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.

Similar News