"விபத்தின் போது போதையில் இருந்தேனா?" - யாஷிகா விளக்கம்.

நடிகை யாஷிகா விபத்தின் போது போதையில் இருந்ததாக தகவல் பரவியதையடுத்து அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

Update: 2021-08-04 02:30 GMT

நடிகை யாஷிகா விபத்தின் போது போதையில் இருந்ததாக தகவல் பரவியதையடுத்து அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.




கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை யாஷிகா'வும் அவரது நண்பர்களும் வார இறுதி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் இரவில் வந்துகொண்டிருந்த பொழுது பயங்கர விபத்து ஏற்பட்டது. காரை ஒட்டிய யாஷிகா பலத்த காயமதைந்தார், அவரது தோழி சம்பவ இடத்திலேயே இறந்தார். இரு ஆண் நண்பர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் யாஷிகா சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தன் நிலை பற்றி விளக்கியிரிந்தார்.



அதில், "சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். கார் ஓட்டும்போது நான் மது அருந்தி இருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் மது அருந்தவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் மது அருந்தி இருந்தால் இப்போது மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன், சிறையில் தான் இருந்திருப்பேன்" என்று விளக்கமளித்துள்ளார்.

Maalaimalar

Tags:    

Similar News