நடிகர் யோகிபாபுவின் 'மண்டேலா' திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ரிலீஸ்.!
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள படம் ‘மண்டேலா’. இப்படத்தில் ஹீரோவா யோகிபாபு நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.;
நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படம் நேரடியாக தனியார் தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள படம் 'மண்டேலா'. இப்படத்தில் ஹீரோவா யோகிபாபு நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'மண்டேலா' படம் வருகின்ற 4ம் தேதி தனியார் தொலைக்காட்சியிலும் மற்றும் அதற்கு அடுத்த நாளான 5-ம் தேதி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.