'சாமானியனுக்கு நிம்மதி அளித்துளீர்கள்' - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பிரதமர் மோடியை பாராட்டிய பவன் கல்யாண்

பெட்ரோல் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடியின் அரசை நடிகர் பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.

Update: 2022-05-23 07:58 GMT

பெட்ரோல் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடியின் அரசை நடிகர் பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.




நேற்று முதல் நாடு முழுவதும் பெட்ரோலுக்கு 8 ரூபாயும் டீசலுக்கு 6 ரூபாயும் லிட்டருக்கு விலையை குறைத்து மோடி அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதனை பலரும் பாராட்டி வருகின்றனர், மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் இந்த நிலையில் 'இது பாராட்டுக்குரியது, இந்த முடிவை எடுப்பதற்காக மோடி அவர்களுக்கு நன்றி' என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.



இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "கலால் வரியை பெட்ரோல் மீது 8 ரூபாயும் டீசல் மீது 6 ரூபாயும் குறைப்பது சாமானியனுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் இதனை அமல்படுத்திய பிரதமர் மோடியின் தலைமையிலான அரசுக்கு நன்றி" எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News