இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டு வருகிற முக்கிய அம்சங்களில் மாற்றம் !
நோய் தொற்றுக்கு பிறகு, இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்றுக்கு பிறகு தற்பொழுது இந்திய பொருளாதாரத்தில் பெருமளவில் முக்கியமான அம்சங்கள் எடுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, தொலைத் தொடர்பு துறை கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருந்து வரும் தொலைத்தொடர்புத் துறைக்கு, பெரியளவில் நிவாரணம் அளிக்கும் வகையில் செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு, நான்கு வருட கால அவகாசத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும் இந்த துறையை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, இந்தத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது வரும் வாரங்களில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம்.
அடுத்ததாக மேலும் வாரக்கடன் வங்கி மற்றும் இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கவும், வங்கிகளின் சுமையைக் குறைவும், அதேவேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காணவும், கடனை வசூல் செய்யவும் வாரக் கடன் வங்கி அமைக்கப்படும் எனவும், இதனை ஆதரிக்க 30,600 கோடி ரூபாய் வரையிலான உத்தரவாதத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதே வேளையில் BSE சந்தை மூலதனமானது 250 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 259 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முக்கிய டேட்டாக்கள் அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் FOMC கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், தடுப்பூசிகளும் அதிகமான அளவில் போடப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்குமோ? என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்படுமா? பொருளாதாரம் குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. ஆக இதன் தாக்கம் சந்தையில் எதிரொலிக்கலாம். இருந்தாலும் கூட தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்தில் பல முக்கியமான அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள
Input & Image courtesy: Economic news