'சாந்தி நிகேதன்' என்ற பெயரில் இயங்கும் மிஷனரி இல்லம் - மதமாற்றம் நடப்பது குறித்து புகார்!
சாந்தி நிகேதன் என்ற பெயரில் இமாச்சலப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் உண்மையில் மத மாற்ற மையமாக செயல்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. FCRA உரிமம் பெற்று வெளிநாடுகளில் இருந்து 'சமூக சேவைக்காக' நிதி பெறும் அமைப்புக்கள் பல உண்மையில் மத மாற்றத்தில் ஈடுபடுவது குறித்து Legal Rights Observatory அமைப்பு ஆதராங்களுடன் தகவல் வெளியிட்டு வருகிறது.
இந்த அமைப்பு வெளிப்படுத்தி வரும் மிஷனரி அமைப்புகளின் வரிசையில் 'சாந்தி நிகேதன் குழந்தைகள் காப்பக அறக்கட்டளை' வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று ஒன்றும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளை மதம் மாற்றி வருவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இமாச்சலப் பிரதேசம் சோலன் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த காப்பகம் 1989ஆம் ஆண்டு மிசோரத்தில் இருந்து இதற்கென்றே அனுப்பி வைக்கப்பட்ட மிஷனரிகளால் தோற்றுவிக்கப்பட்டது.
#FCRAViolation Shanti Niketan Children's Home Trust got Rs 3.43 Cr. Declared that footprint of Jesus is everywhere at Shanti Niketan child home, which proves #Christian conversion of kids thru Child Of Mine Society n Sun Ridge Community Church (JJ Act), wrote @HMOIndia for action pic.twitter.com/pCSaoTb5w9
— Legal Rights Observatory- LRO (@LegalLro) February 28, 2021
தொடக்கத்தில் மிசோரம் இவாஞ்சலிக்கல் ஃபெல்லோஷிப் அமைப்பு இந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளது. இமாச்சலில் இதற்கென்று நிலம் வாங்கி, காப்பகம் கட்டி, அங்கு பணியாற்ற ஆட்களை அனுப்பி அவர்களுக்கு ஊதியமும் வழங்கி வந்துள்ளது. எனினும் தற்போது காப்பக நிர்வாகத்தில் இதன் பங்கு இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து கனடாவைச் சேர்ந்த Child Of Mine என்ற மிஷனரி அமைப்பு இந்த காப்பகத்தின் தேவைகளை கவனித்து வருவதாக காப்பகத்துக்கு வந்து 'சேவை' செய்த சில வெளிநாட்டவர்கள் தங்களது வலைதள பதிவுகளில் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் 2012ஆம் ஆண்டு காப்பகத்துக்கு வந்த வெளிநாட்டவர் குழு காப்பகத்துக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
2012-13 ஆண்டுகளில் வெளிநாட்டவர்கள் குழுக்கள் Child Of Mine அமைப்பின் வழிகாட்டுதலில் இந்த குழந்தைகள் காப்பகத்தில் புதிய கட்டிடம், குழாய் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வந்துள்ளனர். அவர்களில் சிலர் தங்களது அனுபவம் குறித்து பின்வருமாறு பதிவு செய்துள்ளனர்.