விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் என்ன நடக்கிறது? வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட நிலையிலும் குவிந்திருக்கும் கூட்டம்!

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவுக்கு ஒப்புதல்

Update: 2021-11-25 07:28 GMT

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக, தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறாா்கள். அவா்களின் போராட்டம் தீவிரமடைந்ததால், அந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமா் மோடி கடந்த வாரம் அறிவித்தாா்.

அந்த சட்டங்களின் மூலம் வேளாண் துறையில் கொண்டுவரப்படும் சீா்திருத்தங்கள், அதனால் ஏற்படக் கூடிய பயன்கள் ஆகியவற்றை போராடும் விவசாயிகளிடம் புரிய வைக்க முடியாததால் அவற்றை திரும்பப் பெற முடிவெடுத்ததாக அவா் கூறினாா். விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இருந்த போதிலும் உடனே போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் அமைப்பு கூறியுள்ளது. அவர்களுக்குள் ஆலோசனை நடத்தி முடிவு எட்டப்பட்ட பிறகே, அடுத்தகட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுமாம். நடப்பதை எல்லாம் வைத்துப்பார்த்தால், விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் தலையீடு இருப்பாது உறுதியாகத்தெரிகிறது.

Similar News