நம்ம நாட்டின் பெயர் சொன்னாலே தனி மரியாதை - இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு 96 நாடுகளில் பவர் இருக்கு!

96 countries have agreed to Mutual Acceptance of Vaccination Certificates

Update: 2021-11-12 00:45 GMT

இந்தியாவின் கொவிட் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் எற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தின் பயனாளிகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்து, அவர்களின் கல்வி, வணிகம் மற்றும் சுற்றுலா பயணங்களை எளிதாக்க பிற நாடுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி வழங்கலின் வேகத்தை நாடு முழுவதும் விரைவுபடுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் மத்திய அரசு உறுதியுடன் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த அக்டோபர் 21 அன்று 100 கோடி டோஸ்கள் எனும் மைல்கல்லை இந்தியா தாண்டியது.

தற்சமயம், ​​96 நாடுகள் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க ஒப்புக்கொண்டுள்ளன. தொடர்ந்து, இந்த நாடுகளில் இருந்து பயணிக்கும் நபர்களுக்கு அக்டோபர் 20 அன்று வெளியிடப்பட்ட சர்வதேச வருகைகள் குறித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன

வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், சர்வதேச பயண தடுப்பூசி சான்றிதழை கோவின் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்காகவும், சர்வதேச பயணத்தை எளிதாக்குவதற்கும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகம் அனைத்து நாடுகளுடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது.

இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துள்ள நாடுகளின் விவரம்:

கனடா, அமெரிக்கா, பங்களாதேஷ், மாலி, கானா, சியரா லியோன், அங்கோலா, நைஜீரியா, பெனின், சாட், ஹங்கேரி, செர்பியா, போலந்து, ஸ்1வக் குடியரசு, ஸ்லோவேனியா, குரோஷியா, பல்கேரியா, துருக்கி, கிரீஸ், பின்லாந்து, எஸ்டோனியா, ருமேனியா , மால்டோவா, அல்பேனியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், ஸ்வீடன், ஆஸ்திரியா, மாண்டினீக்ரோ, ஐஸ்லாந்து, ஈஸ்வதினி, ருவாண்டா, ஜிம்பாப்வே, உகாண்டா, மலாவி, போட்ஸ்வானா, நமீபியா, கிர்கிஸ் குடியரசு, பெலாரஸ், ​​கெர்கிஸ்தான், ரஷ்யா, ஆர்மேனியா, ஆர்மேனியா, உக்ரைஸ்தான் , ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், அன்டோரா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், மாலத்தீவுகள், கொமொரோஸ், இலங்கை, மொரிஷியஸ், பெரு, ஜமைக்கா, பஹாமாஸ், பிரேசில், கயானா, ஆன்டிகுவா & பார்புடா, மெக்சிகோ, பனாமா, கோஸ்டாரிகா, நிகரகுவா, அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, கொலம்பியா, டிரினிடாட் & டொபாகோ, காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், டொமினிகன் குடியரசு, ஹைட்டி, நேபாளம், ஈரான், லெபனான், சிரியா, தெற்கு சூடான், துனிசியா, சூடான், எகிப்து, ஆஸ்திரேலியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ்.









Tags:    

Similar News