மதமாற்றம்: இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக இரண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் கைது ! #Assam #Conversion
கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யும் பிரச்சாரத்தின்போது இந்து தர்மத்தை இழிவுபடுத்துவதாக இரண்டு பெண் மிஷனரிகளை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். பாஷா சாதிக் லைன், சில்ச்சர் என இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கிறிஸ்தவ மதத்தை பிரசங்கித்து கொண்டிருந்த இருவர் மீது உள்ளூர் இந்துக்கள் தாராபூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளின்படி, இந்து ராக்கி பாஹினி ( அதாவது ஹிந்து மதத்தை பாதுகாக்கும் ராணுவம்) என்ற அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர்கள் 4 மணி அளவில் நித்து கோலா மற்றும் ஷிர்ஷா பாகிடி என்ற என்ற தாராப்பூரை சேர்ந்த இரு நடுத்தர வயது பெண்களை தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் இருவரும் அம்பிளிபையர் மூலமாக பைபிள் வாசகங்களை ஒலிபரப்பிக் கொண்டு இருந்ததாகவும், கிறிஸ்தவத்திற்கு மதம் மாறும் படி துண்டுப்பிரசுரங்களை அளித்ததாகவும் கூறப்படுகிறது. தாராப்பூர் வெளிப்புற காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல் குழு இந்த இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
'கிறிஸ்தவ மதமே உயர்ந்தது என்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினால் மட்டுமே மன அமைதி கிடைக்கும்' என்றெல்லாம் பிரசிங்கத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பூஜைகள் எல்லாம் தேவை இல்லை என்றும் இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
" அவர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு இந்து இடத்தில் இதுபோன்ற செய்ய முடியாது" என்று உள்ளூர் அமைப்பைச் சேர்ந்த பிஜோய் நாத் தெரிவித்தார். அவர்களிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "இது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு பெண்களையும் தடுத்து நிறுத்தி இந்த விஷயத்தை மேலும் விசாரித்து வருகிறோம்" என தெரிவித்தார்.