டி20 கிரிக்கெட்: இந்தியா தோல்வியை கொண்டாடிய மனைவி மீது கணவர் புகார்!
உத்தர பிரதேச மாநிலத்தில், இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய தனது மனைவி மீது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய தனது மனைவி மீது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மாதம் அக்டோபர் 24ம் தேதி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதியது. இதில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் விட்டிருந்த நிலையில், சில தேச விரோதிகள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி வந்தனர். அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளும் பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்து கல்லூரி விடுதியில் கொண்டாடினர். அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதற்கு பல கோடி ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் அவர்கள் மீது ஜம்மு காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு ஒட்டு மொத்த இந்திய மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரை போன்று உத்தரபிரதேச மாநிலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம்பூர் அஸீம் நகரில் இஷான் மியா என்பவர் தன்னுடைய மனைவி ராபியா ஜான்சிமீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கணவருடன் கருத்து மோதல் காரணமாக தனது சகோதர்களுடன் வசித்து வந்த ராபியா, டி20 ஐபிஎல் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதை கொண்டாடியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கஞ்ச் காவல் நிலையத்தில் ராபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருகின்றனர். மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த கணவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Source, Image Courtesy: Dinamalar