உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னேறும் இந்தியா : தெற்கு ஆசிய பிராந்தியத்தின் கிங் மேக்கர் !
India Climbs Two Places To Rank 46 On Global Innovation Index 2021
உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியல் 2021-ல், இந்தியாவை இரண்டு இடங்கள் முன்னேறி 46வது இடத்தை பிடித்துள்ளது. இது நாட்டின் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சூழல் அமைப்புக்கு சான்றாக உள்ளது. இந்தியா 2015-ம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்தது. 2019-ம் ஆண்டில் 52 வது இடத்தை பிடித்தது. 2020ஆம் ஆண்டு 48ஆவது இடத்தை பிடித்திருந்தது. உலகம் முழுவதும் மிகவும் புதுமையான வளர்ந்த நாடுகளின் அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக, இந்தியா தனது கண்டுபிடிப்பு தரவரிசையில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதால், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் 2019 -ன் முன்னணி கண்டுபிடிப்பு சாதனை நாடுகளில் ஒன்றாக இந்தியாவை WIPO ஏற்றுக்கொண்டது.
மிக பரந்த அறிவு மூலதனம், துடிப்பான புதிய நிறுவனங்களின் சுற்றுச்சூழல் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களால் செய்யப்பட்ட அற்புதமான பணிகள் காரணமாக, உலகளாவிய கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் இந்தியா நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளது. நாட்டின் புதுமை கண்டுபிடிப்பு சூழலை மேம்படுத்தியதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, உயிரி தொழில்நுட்ப துறை, விண்வெளித்துறை ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.
மின்சார வாகனங்கள், பயோடெக்னாலஜி, நானோ தொழில்நுட்பம், விண்வெளி, மாற்று எரிசக்தி ஆதாரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் கொள்கை தலைமையிலான கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருவதன் மூலம், தேசிய முயற்சிகளை மேம்படுத்துவதை உறுதி நிதி ஆயோக் அயராது உழைத்து வருகிறது.
புதுமை கண்டுபிடிப்புகளை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்குவதற்கான திசையில் முக்கிய நடவடிக்கையாக, நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்பு பட்டியல் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலையை கண்காணிப்பதிலும் மதிப்பீடு செய்வதிலும் ஒரு நிலையான உந்துதலை, உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியல், நிதி ஆயோக் ஆகியவை வழங்கியுள்ளது.