மத்திய அரசின் அதீத முயற்சிகளால், மின்சார வாகனங்களின் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரிப்பு! பிரம்மிக்க வைக்கும் எண்ணிக்கை!

Update: 2022-02-12 11:49 GMT

966,363 மின்சார வாகனங்களை  இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பெட்ரோல் விலை ஏற்றம்,  சுற்றுச்சூழல் மாசு  போன்றவைகளை   கருத்தில் கொண்டு, மத்திய  பா.ஜ.க அரசின் முயற்சிகளால் இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.


மத்திய கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் 'கிருஷ்ணன் பால் குர்ஜர்' ராஜ்யசபாவில் எழுத்து வடிவமாக இது குறித்து  குறிப்பிடுகையில்: மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, FAME( Faster Adoption and Manufacturing of (Hybrid and) Electric Vehicles inIndia  ) என்ற திட்டம் 2015இல் நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. தற்போது இத்திட்டம் இரண்டாவது கட்டமாக, ஏப்ரல் 1 முதல் 10 ஆயிரம் கோடி நிதி உதவியுடன் பயணித்து வருகிறது.


மேலும் மத்திய அரசு, மின்சார வாகனங்களின் பேட்டரிகளை உற்பத்தி செய்ய PLI (Production Linked Incentive)  என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.  இத்திட்டம் பேட்டரிகளின் உற்பத்தி செலவை குறைத்து, வாகனங்களின் விலையும் குறைக்க உதவி செய்யும். 

மின்சார வாகனங்களுக்கான G.S.T வரிவிதிப்பு 12 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம்  வரை குறைக்கப்பட்டுள்ளது , மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கான வரிவிதிப்பு 18 சதவிகிதத்திலிருந்து 5  சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

என்று அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இச்  சிறப்பான முயற்சிகளால் , அதிக அளவிலான மின்சார வாகனங்களின் பயன்பாடு கொண்ட   மாநிலங்களாக, உத்தர  பிரதேஷ்  (276,217),  டெல்லி  (132,302), கர்நாடக  (82,046), பீகார்  (64,241), மகாராஷ்டிரா   (58,815), ராஜஸ்தான்  (53,141)  மற்றும் தமிழ் நாடு  (50,296) ஆகிய மாநிலங்களாக உள்ளன.

SWARAJYA

Tags:    

Similar News