பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) உறுப்பினர் கையில் முகலாயர் கால மாடல் கத்தி! இந்தியா முழுவதும் அரங்கேறும் பகீர் கொலைகள்! பதற வைக்கும் பின்னணி?

PFI activist Farhan Sheikh arrested with dagger while protesting Ahmedabad blasts verdict;

Update: 2022-02-23 09:26 GMT
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) உறுப்பினர் கையில் முகலாயர் கால மாடல் கத்தி! இந்தியா முழுவதும் அரங்கேறும் பகீர் கொலைகள்! பதற வைக்கும் பின்னணி?

கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள பையாம்பலம் கடற்கரை அருகே, அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின் போது, கூரிய ஆயுதங்களை ஏந்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

சாலட் தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள கதீஜா மன்சிலில் வசிக்கும் 19 வயது ஃபர்ஹான் ஷேக்கிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. போராட்டம் ஓய்ந்த பிறகும், சில PFI உறுப்பினர்கள் வளாகத்தை காலி செய்ய மறுத்துவிட்டனர். அவர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லும்படி போலீசார் கூறியதையடுத்து, இஸ்லாமியர்கள் தடியடி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி போலீசார் குற்றவாளிகளை சோதனையிட்டபோது பயங்கர ஆயுதம் கைப்பற்றப்பட்டது.


Full View


S-கத்தி என்று அழைக்கப்படும் அவை, பெரும்பாலும் மலபார் முழுவதும் பரவிய இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் மூலம் இந்தியாவில் பரவியது. இந்த ஆயுதம் கிட்டத்தட்ட 9 அங்குல நீளமானது. கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. குற்றவாளி ஷேக்கை கண்ணூர் டவுன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் கோடேரி கைது செய்தார்.

ஷேக் தனது பாக்கெட்டுகளில் ஆயுதத்தை ஏந்தியவாறு முழு ஊர்வலத்திலும் பங்கேற்றார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினார். கடந்த 4 ஆண்டுகளாக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தீவிரப் பணியாளராக இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீஜித் கூறினார். விசாரணைக்குப் பிறகு ஷேக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை கர்நாடக ஷிவமொகாவில் பஜ்ரங் தள் செயற்பாட்டாளர் ஹர்ஷா கொலை செய்யப்பட்டதில் இதேபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. 

Tags:    

Similar News