1700 ரயில்களில் 15% வரை குறையும் ரயில் கட்டணங்கள்- ரயில்வே அமைச்சகம் !

Update: 2021-11-16 07:52 GMT

கடந்த வாரம் இந்திய ரயில்வே கொரோனா தொற்று நோய்க்கு முந்தைய வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளை தொடர முடிவு செய்தது. மெயில் மற்றும் விரைவு ரயில்களுக்கான சிறப்பு 'tag' கை விட்டு தொற்று நோய் பரவலுக்கு முந்தைய டிக்கெட் விலைக்கு மாற்ற மண்டல ரயில்வேக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்திய ரயில்வே முழுவதும் பயணிகள் கட்டணம் சுமார் 15 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பெயரிடப்படாத ஒரு மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி கூறுவதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்டுள்ள தகவலில், "கோவிட்-19 தொற்று நோய்ப் பரவலின் போது தொடங்கப்பட்ட சிறப்பு ரயில்கள், சாதாரண ரயில் சேவைகள் ஆக மாற்றப்படுகின்றன. இதன் விளைவாக பயணிகள் கட்டணம் சுமார் 15 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சிறப்பு என்று கூறப்பட்ட சுமார் 1600 ரயில்களில் வரும் நாட்களில் கட்டணம் குறைக்கப்படும்." தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், ரயில்வே 1180.19 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 69.88 மில்லியனாக இருந்தது. இந்திய ரயில்வே நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான பயணிகள் கட்டணத்தின் மூலம் ரூ.15,434.18 கோடியை ஈட்டியுள்ளது, இது செப்டம்பர் 2020 வரை வசூலான ரூ.1,258.74 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது.

இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட மற்ற நடவடிக்கைகளைத் தொடர இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. டிக்கெட்டுகளை கவுன்டரில் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகள், ரயில்களில் சமைத்த உணவை வழங்காமல் இருப்பது மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளுக்கான அதிக கட்டணம் ஆகியவை இதில் அடங்கும்.

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தடுப்பதே நடைமேடை டிக்கெட்டுகளுக்கான அதிக கட்டணத்தின் நோக்கம். கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் இருப்பதால், டிக்கெட்டுகளை கவுண்டரில் விற்பனை செய்வதையோ அல்லது இந்திய ரயில்வேயில் சமைத்த உணவை வழங்குவதையோ நாங்கள் தொடர்ந்து கட்டுப்படுத்துவோம், "என்று மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரி தொடர்ந்து கூறினார்.

செயல்பாடுகளை சீராக்க, பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) அடுத்த 7 நாட்களுக்கு இரவின் சிலவணிக நேரங்களில் ஆறு மணி நேரம் மூடப்படும். சிஸ்டம் டேட்டாவை மேம்படுத்தவும், புதிய ரயில் எண்களை மேம்படுத்தவும் இது செய்யப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.


அட்டைப் படம் நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

Tags:    

Similar News