வலுவான கம்-பேக் கொடுக்கும் இந்திய பொருளாதாரம் : தொடர்ந்து 7-வது மாதமாக 30 பில்லியன் டாலர் அளவை கடந்த ஏற்றுமதி!

Rising Industrial growth, Restrained Inflation and Strong Services Revival

Update: 2021-11-15 13:00 GMT

நாட்டின் ஏற்றுமதி 2021-22 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து 7-வது மாதமாக 30 பில்லியன் டாலர் என்ற அளவை கடந்தது. 2021-22-ம் நிதி ஆண்டில் தொழில் வளர்ச்சி அதிகரிப்பு, கட்டுப்பாட்டுக்குள் பணவீக்கம், மீண்டெழுந்த சேவைகள் என வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா வெற்றி நடைபோடுகிறது.

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீடு குறித்த மதிப்பீடுகள், தொழில் உற்பத்தியில் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2021-22 நிதியாண்டில் முதலாம் காலாண்டில் தொழில் உற்பத்தி குறியீடு சராசரியாக 121.3 என்ற அளவிலிருந்து 2-ம் காலாண்டில் 130.2 ஆக வளர்ச்சியடைந்துள்ளது

. 2-ம் காலாண்டில் இது மேலும் அதிக அளவிற்கு இருந்திருக்கக்கூடும். பருவ மழைத் தீவிரம் காரணமாக நிலக்கரி வெட்டியெடுப்பதில் இடையூறு ஏற்பட்டு இதன் விளைவாக மின்சார உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டதால், ஒட்டுமொத்த உற்பத்தி குறியீட்டு வளர்ச்சி குறந்தது.

தொழில் உற்பத்தி குறியீட்டில் உற்பத்தி குறியீடு படிப்படியாக வளர்ச்சியடைந்தது அதன் பயனாக கொள்முதல் மேலான்மை குறியீடும் அதிகரித்தது. முதல் காலாண்டில் சராசரி 74-ஆக இருந்த மூலதனப் பொருட்கள் குறியீடு 2-ம் காலாண்டில் கணிசமான அளவுக்கு உயர்ந்து 91.7 ஆக இருந்தது.

2021-22 நிதியாண்டில் நுகர்வும் அதிகரித்ததால் முதலீட்டுக்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. முதல் காலாண்டில் 91.7 ஆக இருந்த நுகர்வோர் நீடிப்பு குறியீடு 2-ம் காலாண்டில் 121.2 ஆக உயர்ந்தது.

அக்டோபர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு வருடாந்தர நுகர்வோர் நிலை பணவீக்கத்தில் சரிவை காட்டியுள்ளது. முதலாம் காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைக் குறியீடு இரண்டாம் காலாண்டில் 5.1 சதவீதமாக குறைந்து அக்டோபர் மாதத்தில் மேலும் குறைந்து 4.5 சதவீதமாக இருந்தது.

இதேபோல நுகர்வோர் உணவு விலை பணவீக்கமும் முதல் காலாண்டில் 4 சதவீதத்திலிருந்து 2-ம் காலாண்டில் 2.6 சதவீதமாக குறைந்து அக்டோபரில் 0.8 சதவீதம் என்ற அளவுக்கு சரிவடைந்தது.




Tags:    

Similar News