பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது தீவிரவாத வழக்குப்பதிவு!

துபாயில் நடைபெற்ற டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஜம்மு காஷ்மீர் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இது பற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-26 11:21 GMT

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடி அது பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எனவே இது தொடர்பாக கரண் நகர் மற்றும் சௌரா காவல் நிலையங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்கிம் சௌரா கல்லூரி மாணவர்கள் மீது தீவிரவாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை திருப்பப் பெறுமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம் ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது பற்றி சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் நசீர் குஹேமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையான தண்டனையாகும். இது அவர்களின் எதிர்காலத்தை அழித்து அவர்களை அந்நியப்படுத்தும். நாங்கள் அவர்களின் செயல்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை சீரழிக்கும் என்றார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai

Tags:    

Similar News