இந்தியாவில் மூன்றாம் அலை மோசமாக இருக்காது - மூத்த வைராலஜிஸ்ட் தகவல் !

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை போல் மூன்றாம் அலை மோசமாக இருக்காது.

Update: 2021-09-18 13:10 GMT

இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது எந்தவிதமான உருமாற்றம் அடைந்து வைரஸ்கள் இல்லாதபட்சத்தில், இரண்டாம் அலையைப் போல மோசமான பாதிப்புகள் மூன்றாம் அலையில் இருக்காது என்றும் மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தற்போது கூறியுள்ளார். கொரோனா வைரஸ் முதல் அலையை விட கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஏற்பட்ட இரண்டாம் அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். தமிழ் அப்போது தடுப்பூசி செலுத்தும் அளவு மிகவும் குறைவாக இருந்தது.  


ஆனால் தற்பொழுது நிலைமையே வேறு, தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்த பின்னர் தொற்றின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும், குறிப்பாக சமூக விலகல், தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் மூன்றாவது அலையை எதிர்பார்க்கலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 


இந்திய தொழிற்கூட்டமைப்பு சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த வைராலஜிஸ்டுமான ககன்தீப் காங் இதுபற்றி கூறுகையில், "இப்போதுள்ள சூழலில் புதிதாக எந்த உருமாற்றம் அடைந்து வைரஸ்கள் உருவாகாமல் இருந்தால் மூன்றாவது அலை வந்தாலும், அது இரண்டாம் அலையைப் போன்று மோசமான பாதிப்புகள் இருக்காது. அதேநேரம் புதிய உருமாற்ற கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்குவதும், ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்" என்று அவர் கூறினார். 

Input & Image courtesy:indianexpress.


 


Tags:    

Similar News