நல்வாழ்வுக்கு ஆபத்தாக விளங்கும் பொதுவான வகை நபர்களை அடையாளம் காண்பது எப்படி?

Update: 2021-04-22 13:12 GMT

நாம் அனைவரும் பல வகையான மக்களால் சூழப்பட்டிருக்கிறோம். அவர்களில் சிலர் நல்லவர்களாகவும், சிலர் மோசமானவர்களாகவும், பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவர்களாகவும் இருப்பர். இவர்களில் பெரும்பாலானோரை அடையாளம் காண்பது எளிதானது.

ஆனால் நமக்கு கேடு நினைப்பவர்களை கண்டுபிடிக்கும் போது அதில் பல சவால்கள் இருக்கும். ஒன்று நீங்கள் அவர்களை தாமதமாக அடையாளம் காணலாம் அல்லது உங்களால் ஒருபோதும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஏனெனில் அவர்கள் உங்களிடத்தில் ஒரு வகையான நம்பிக்கையை உண்டாக்குகின்றனர்.


ஆனால் இது போன்ற நபர்களை அடையாளம் காணுதல் மிகவும் முக்கியம். அப்போது தான் நீங்கள் அவர்களிடமிருந்து விலகி இருக்க முடியும். உங்கள் நல்வாழ்வுக்கு ஆபத்தாக விளங்கும் நான்கு பொதுவான வகை நபர்களைப் பற்றி பார்க்கலாம். மற்றவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியாத சிலர் இருக்கிறார்கள்.

அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆனால் உங்கள் நிலையைப் பற்றி ஒருபோதும் உங்களிடம் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் தேவைப்படும்போதோ அல்லது சில சிக்கல்களை எதிர்கொள்ளும்போது மட்டுமே அவர்கள் உங்களைப் பற்றி நினைப்பார்கள்.

சிலர் எப்போதும் எல்லோரையும் பற்றி எதிர்மறையாகப் பேசுவார்கள். இதேபோல் சிந்திக்க, உங்களையும் கட்டாயப்படுத்துவார்கள். இதனால் நீங்கள் படிப்படியாக அவர்களுக்கு எல்லா முக்கியத்துவத்தையும் கொடுக்க ஆரம்பிப்பீர்கள். ஆனால், இறுதியில், அத்தகைய நட்புகளிலிருந்து உங்களுக்கு எந்தவிதமான சாதகமான விளைவுகளும் கிடைக்காது.

இவை அனைத்திலும் மிகவும் ஆபத்தான நபர்கள் இவர்கள் தான். "புல் எப்போதும் மறுபுறம் பசுமையாக இருக்கும்" என்ற பழமொழி பொறாமை கொண்டவர்களுக்கு நன்றாக பொருந்தும். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நல்ல விஷயம் நடந்தாலும், அவர்கள் அதிலிருந்து எந்த திருப்தியையும் பெற மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மற்றவர்களின் செல்வத்தை வைத்து தங்களுடயதை அளவிடுகிறார்கள்.


பொதுவாக திருப்தியை நாம் உள்ளிருந்து பெற வேண்டும். பொறாமை கொண்டவர்களைச் சுற்றி அதிக நேரம் செலவிடுவது ஆபத்தானது. ஏனென்றால் அவர்கள் உங்கள் சொந்த சாதனைகளை அற்பமாக நினைக்க கற்றுக் கொடுப்பார்கள். தங்கள் தேவைகளுக்காக மற்றவர்களைக் பயன்படுத்தும் நபர்கள் உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்கி விடுவார்கள்.

அவர்கள் உங்களை நண்பர்களைப் போலவே நடத்துவதால் அவர்கள் சமாளிக்க தந்திரமானவர்களாக இருக்கலாம். நீங்கள் விரும்புவது, உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது, நீங்கள் நினைப்பது என்ன என்பது வரை உங்களைப் பற்றி அவர்களுக்கு எல்லாமே தெரியும். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், இந்த தகவலை அவர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்கிறார்கள்.

Similar News