தடுப்பூசி மூலம் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: உணர்ந்த பங்களாதேஷ் அரசு!

Update: 2021-05-03 12:00 GMT

இந்தியாவும் கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறது மேலும் இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷிலும் தற்போது பரவி வரும் இரண்டாவது கொரோனா அலையை எதிர்த்துப் போராடு வருகிறது. மேலும் தற்போது உள்ள நோய் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியைப் போடுவதன் மூலம் தான் தடுக்க முடியும் என்பதை பங்களாதேஷ் அரசு தற்போது உணர்ந்துள்ளது.


எனவே பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசினா அவர்கள் இதைப் பற்றி கூறுகையில், "பங்களாதேஷ் அரசாங்கம் எந்த விலை கொடுத்தாவது தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யும்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பங்களாதேஷில் உள்ள ஏழை மக்களின் துன்பங்களை உழைக்க இந்தியா ரூபாயில் சுமார் 1300 கோடி கோடியை ஒதுக்கி உள்ளார்.

ஒவ்வொருவரும் தடுப்பூசி எடுத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 36.5 லட்சம் குறைந்த வருமானம் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் இந்திய ரூபாயில் சுமார் 2,200 ரூபாய் நிதி உதவியையும் அவர் வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.


வைரஸின் இரண்டாவது அலை தோன்றிய உடனேயே, மனிதாபிமான உதவிகளின் நடவடிக்கைகளைத் தொடங்க பிரதமர் உத்தரவிட்டார். கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க எந்தவொரு விலையை கொடுத்தாவது தனது அரசாங்கம் தடுப்பூசிகளை வாங்குவதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். நாங்கள் அதிக தடுப்பூசிகளைக் கொண்டு வருகிறோம். எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல், அதிகமான தடுப்பூசிகளைக் கொண்டு வருவோம் என்று கூறினார்.

Similar News