ஜி.எஸ்.டி மூலம் சாதாரண மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி!

Update: 2021-06-30 10:59 GMT

ஜிஎஸ்டி அமல்படுத்தியதன் காரணமாக சாதாரண மனிதர்களின் வரிச்சுமையை மத்திய அரசு குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax-GST) ஒரு மறைமுக வரி ஆகும். இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்) மூலமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருக்கிறது. இது சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை குறைத்துள்ளதுடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து உள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி துவக்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ஜூலை 1ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளை தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்குபெற்று டிஜிட்டல் இந்தியா மூலம் பயன் பெற்றவர்களிடம் உரையாடல் நடத்தவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பொது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் உரிய காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News