இ-கேஒய்சி மூலம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்:மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இதுவரை போலியாக இருந்து வந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது விநியோக முறையை சீர்திருத்தம் செய்வதற்கு டிஜிட்டல் மயம் மற்றும் வெளிப்படை தன்மை திறமையான விநியோக நடைமுறைகளில் கவனம் செலுத்தி வருகிறது இதன் காரணமாக பல கசிவுகள் கண்டறியப்பட்டு குறைக்கப்படுவதோடு இலக்குகள் எட்டப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்திய உணவு கழகத்தில் ஒதுக்கப்படும் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் புதிய முறையும் உருவாக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி 80.6 கோடி பயனாளர்களைக் கொண்ட 20.4 கொடி குடும்ப அட்டைகளின் விநியோக நடைமுறைகள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது அந்த வகையில் குடும்ப அட்டைகளில் 99.8 சதவிகிதமும் 98.7 சதவிகிதம் தனிப்பட்ட பயன்களிலும் ஆதார் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது மேலும் இதன் கீழே ரேஷன் கார்டுகளின் போலிகளை கண்டறிவதற்கும் வழிவகை செய்யப்பட்டு இதுவரை போலியாக செயல்பட்டு வந்த 5.8 கோடி ரேஷன் கார்டுகள் அகற்றப்பட்டுள்ளன அதோடு தகுதியற்ற பயனாளிகளின் எண்ணிக்கையும் இதன் மூலம் குறைந்துள்ளது
அதனைத் தொடர்ந்து சரியான பயனாளர்களுக்கும் பொது விநியோகத்தின் மூலம் பொருட்கள் சரியாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு இ-கேஒய்சி எனப்படுகின்ற மின்னணு முறையிலான வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் என்ற பதிவுகளும் மேற்கொள்ளப்படுகிறது அதன்படி தற்பொழுது 64% பயனாளிகள் இ-கேஒய்சி மூலம் நுகர்வோர் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர் பதிவு செய்யாத பயனாளிகளும் இ-கேஒய்சியை முடிப்பதற்கான செயல்முறைகள் தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலை கடைகளிலும் பயனாளிகளின் இ-கேஒய்சி வசதி பயனாளிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.