கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் - அமைச்சர் பேச்சுக்கு ஆன்மீக நலவிரும்பிகள் கண்டனம்!

Update: 2021-07-01 01:33 GMT

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க முடியாது என்றும் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று ஆன்மீக நலன் விரும்பிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ஆர்ட் ஆஃப் லிவ்விங் என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் முதலில் வாடகைதாரர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் காலப்போக்கில் அவர்கள் வசித்து வரும் கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கபடும் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் அறநிலையத்துறை சட்டத்தின் 78வது சட்டப்படி கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.இதற்கு ஆன்மீக நலன்விரும்பிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவர்களிடமிருந்து கோவில் நிலத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் பேசி வருவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசே கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News