சிறப்புத் தேயிலை உற்பத்தியை ஊக்குவிக்க அசாம் அரசு புதிய திட்டம்!

Update: 2021-07-05 06:16 GMT

தேயிலை தோட்டக்காரர்களுக்கு அதிக விலையைப் பெறுவதற்காகவும் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக தேவையில் உள்ள மரபுவழி தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஊக்கத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று அசாம் அரசாங்கம் வெளியிட்டது.


2020 அசாம் தேயிலை தொழில்களில் சிறப்பு ஊக்கத்திட்டத்தை(ATISIS) முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேயிலை எஸ்டேட் நில சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை மேம்படுவதற்காக அரங்கத்தின் திட்டத்தை அவர் எடுத்துரைத்தார்.

"இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் CTC மற்றும் ஆர்த்தோடாக்ஸ் தேயிலை வகைகளில் சமநிலையை ஏற்படுத்துவதாகும். ஆர்த்தோடாக்ஸ் தேயிலைக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் சிறந்த தேவை இருக்கின்றது. உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கினால் சந்தைகளில் பங்கினை விரிவுபடுத்த முடியும்," என்று அவர் தெரிவித்தார்.

ஆர்த்தோடாக்ஸ் மற்றும் சிறப்புத் தேயிலைகள் மாநில உற்பத்தியில் 11 சதவீதத்தைக் கொண்டுள்ளது மீதமுள்ளவை CTC வகையைச் சேர்ந்தவை.

ஆர்த்தோடாக்ஸ் தேயிலையை உற்பத்தி செய்வதற்கான விலை CTC வகையை விட 20-25 சதவீதம் அதிகமாகும், இந்த இடைவெளியைக் குறிப்பதற்கே ATISIS உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். ATISIS திட்டத்தின் கீழ், மாநில அரசாங்கம் ஆண்டுக்கு மூன்று சதவீதம் வட்டிக் கடனை வழங்கும் மற்றும் ஆர்த்தோடாக்ஸ் மற்றும் சிறப்புத் தேயிலை உற்பத்தியில் கிலோவுக்கு ரூபாய் 7 மானியமும் வழங்குகிறது. இந்த தேயிலைக்கான உற்பத்தி இயந்திரங்களை வாங்க 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் பா.ஜ.க தலைமையிலான மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்த மூன்று ஆண்டுகளுக்கான விவசாய வருமான வரி விடுமுறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஏப்ரல் 1 2020முதல் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். ஊக்கத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி செலவாகும் என்று முதலமைச்சர் கூறினார். மேலும் வெளிநாட்டு அசாம் தேயிலையை விளம்பரப்படுத்த 50 கோடி செலவாகும் என்று முதலமைச்சர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் சந்திரா மோகன் படோவரி, நிதியமைச்சர் அஜந்தா நியோக், தேயிலை வாரிய தலைவர், இந்தியத் தேயிலை சங்கத் தலைவர் விவேக் கோயங்கா ஆகிவரும் கலந்து கொண்டனர்.

Source: New Indian Express

Similar News