அமைச்சர்கள் உட்பட திமுகவினர் பலரும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவையும் குறிவைத்து அவதூறு பரப்பி வரும் நிலையிலும் ஈஷா மையம் தனது சமூக சேவையை தொடர்ந்து வருகிறது. அண்மையில் ஈஷா மையத்தின் சார்பாக 300 BiPAP வென்டிலேட்டர்கள் மற்றும் 18 லட்சம் KN 95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவிற்க்கு எதிரான போரில் மாநில அரசின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் விதமாக இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாக ஈஷா மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "கொரோனா நிவாரணத்துக்காக ஈஷா மையம் சார்பில் இவற்றை அளித்ததற்கு நன்றி" என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஈஷா மையமும் அதன் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து ஒரு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த மே மாதத்தில் தமிழக அரசுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ கவச உடைகள் மற்றும் KN 95 முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈஷா மையத்தால் இயக்கப்படும் 18 மின் மயானங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இலவச சேவை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.