சீனாவின் புதிய வைரஸ் கொரோனா போல் மனிதருக்கும் பரவுமா? அதிர்ச்சி தகவல்!

Update: 2021-07-21 12:47 GMT

சீனாவை புதிது புதிதாக பல வைரஸ்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையில் தற்போது குரங்கு B வைரஸ் காரணமாக சீனாவில் கால்நடை மருத்துவர் பலியாகி இருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே இத்தகைய இந்த சூழ்நிலையில் இந்த வைரஸ் கொரோனா வைரஸ் போல மனிதருக்கு மனிதர் பரவும் வகையைச் சேர்ந்தது அல்ல என்ற ஆறுதலான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் மனிதருக்கு மனிதர் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.


உலகில் முதல் முதலாக மங்கி B வைரஸ் 1932ம் ஆண்டில் இருந்து இந்த வைரஸ் உள்ளது. மங்கி B வைரஸ் பாதித்த குரங்கு ஒருவரை கடித்தாலோ, அல்லது நகங்களால் கீறினாலோ மங்கி பி வைரஸ் பரவும் என்கிறார்கள் மருத்துவர் நிபுணர்கள். அவர்கள் கூறும் அறிவுரை என்னவென்றால், விலங்குகளுக்கு சிகிச்சையைளிக்கும் மருத்துவர்கள், ஆய்வக பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மங்கி பி வைரஸ் பாதித்தால் காய்ச்சல், தசை வலி, தலைவலி உண்டாகும். காயங்களில் கொப்புளங்கள் உண்டாகும். வயிற்றும் வலி உண்டாகும். 


மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். வயிற்றுப்போக்கும் அதிகமாகும். மூளை, தண்டுவடத்தில் வீக்கம் ஏற்படும். நரம்புக்கோளாறு, மூளை செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு உண்டாகும். மங்கி பி வைரசில் இருந்து தப்பிக்க, பொதுவாகவே குரங்கு கடித்தால் உடனே கடிபட்ட இடத்தினை சோப்பு போட்டு கழுவிவிட வேண்டும். 20 நிமிடங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றியபின்னர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  

Similar News