மீள முடியாத கடனில் சிக்க போகும் மா, பப்பாளி உழவர்கள்... தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை..!

Update: 2024-05-01 13:36 GMT

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முழுவதும் நிலவி வருகின்ற கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக சேலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளிப்பயிர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதால் அவர்களுக்கு வேண்டிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தற்போது நிலவு வருகின்ற வெப்பம் மற்றும் வறட்சியால் சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பிரதான விவசாயமாக உள்ள மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான இழப்பீட்டை சந்தித்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு வேண்டிய நிவாரணம் வழங்க இதுவரை தமிழக அரசு முன்வரவில்லை என்பது கண்டிக்கத்தக்கது! 

தமிழ்நாட்டின் மாம்பழத் தலைநகரமாக விளங்கிவரும் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கிருஷ்ணகிரியிலும் தர்மபுரி மற்றும் சேலத்திலும் மல்கோவா, அல்போன்சா, செந்தூரம், தோத்தாபுரி உள்ளிட்ட 30 வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் பப்பாளி பழங்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்கள் அனைத்திலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை அதனால் பாசன ஆதாரங்கள் அனைத்தும் இந்த மாவட்டங்களில் முழுமையாக வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் பல நூறு அடிக்கும் கீழ் சென்று விட்டது. 

இதனால் மாம்பழ உழவர்களுக்கு ஏக்கருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் பப்பாளி உள்ளவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது, இவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்ல அவர்களுக்கு ஏற்படும் இழப்பின் ஒரு பகுதியை கூட தமிழக அரசு ஈடு செய்யவில்லை என்றால் அவர்கள் மீளா கடனில் சிக்கிம் கொள்வார்கள். 

அதனால் மா மற்றும் பப்பாளி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் மாம்பழக் கூழ் ஆலைகளில் கொள்முதல் செய்யப்படுகின்ற மாம்பழங்களுக்கு கிலோவிற்கு ரூபாய் 50 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News