மோடி அமித்ஷாவை அவதூறாக பேசிய பாதிரியார்! வாய் மூடி மௌனம் காக்கும் தமிழக அரசு!

Update: 2021-07-22 09:58 GMT

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் இறுதிக் காலம் பரிதாபமாக இருக்கும் என்றும் அவர்களை நாய்களும், புழுக்களும் சாப்பிடும் நிலை வரும் என்று கிறிஸ்தவ மத போதகர் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டு பேசினார். அப்போது அமைச்சர் சேகர் பாபு எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும் இந்துக்கள் அவருக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்றும் "உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. எங்கள் ஆயர்களும் கிறிஸ்தவ ஊழியர்களும் வீடு வீடாக சென்று கேட்டுக்கொண்டதற்கு பின்னரே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்." என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு ஓட்டு போட்டது எல்லாம் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மட்டுமே என்றும் நீங்கள் வெற்றி பெற்றது நாங்கள் போட்ட பிச்சை என்றும் அவர் பேசியுள்ளார். பின்னர் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி பாரதமாதாவின் மீது கால்கள் படக்கூடாது என்பதற்காக செருப்பு அணிய மாட்டேன் என்று கூறியதை மேற்கோள் காட்டி நாங்களெல்லாம் பாரதமாதாவின் மீது கால்கள் பட்டால் சொறி, சிரங்கு போன்ற நோய்கள் ஏற்படும் என்பதற்காக செருப்பு அணிந்து கொள்கிறோம் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தாங்கள் 42% இருந்ததாகவும் தற்போது 62%ஐ நெருங்கி விட்டதாகவும் விரைவில் 70% ஆகி விடுவோம் என்பதால் "எங்களது மயிரை கூட உங்களால் புடுங்க முடியாது" என்றும், "நாங்கள் இதை இந்துக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறோம்" என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் எங்களின் வளர்ச்சியை உங்களால் தடுக்க முடியாது என்று பேசினார். இதேபோல் மோடி மற்றும் அமித்ஷாவின் இறுதி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும் என்றும் அவர்களை நாய்களும் குழுக்களும் சாப்பிடும் நிலை ஏற்படும் என்றும் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திமுக வெற்றி பெற்றது நாங்கள் போட்ட பிச்சை என்றும், பாரதமாதாவை அசிங்கம் மற்றும் ஆபத்தானவர் என்றும், இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் எங்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை அவதூறாக பேசியதற்கு இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பலர் தங்களது கண்டணத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News