டென்மார்க்கில் மோடி அலை - விண்ணை முட்டும் "மோடி.. மோடி.. மோடி.." கோஷங்கள்!
டென்மார்க் : பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இவரது பயணம் உலக கவனம் பெற்றுள்ளது.
நேற்று முதல் நாள் பயணமாக ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அந் நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அப் பேச்சுவார்த்தையில், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் குறித்து பேசப்பட்டது.
இரண்டாம் நாள் பயணமாக டென்மார்க் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந் நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோபன்ஹேகனில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொள்ள திட்டமிடப்பட்டது. இதனையடுத்து அந்த நிகழ்ச்சிக்காக அரங்கிற்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு, அந்த அரங்கில் நிரம்பி வழிந்த இந்தியர்கள் மத்தியில் இருந்து " மோடி... மோடி... மோடி.... " என்ற உணர்ச்சி பொங்கும் கோஷங்கள் அந்த அரங்கை அதிரச் செய்தது. அந்த கோஷங்களை தொடர்ந்து "பாரத் மாதா கி ஜே!" என்ற கோஷமும் எழுப்பப்பட, அந்த அரங்கு மேலும் அதிர்ந்தது.
இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.