1996 மொடக்குறிச்சி தேர்தல்!! 1033 வேட்பாளர்களின் அதிரடி!!
By : Bharathi Latha
Update: 2026-03-18 13:16 GMT
1996-ல் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் நடந்த தேர்தலில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 1029 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். விவசாயிகளின் 33 கோரிக்கைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என இதுபோல செய்தனர்.
இதனால் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒரு மாதம் தள்ளிவைத்தது. வேட்பாளர் பட்டியல் 50 பக்கத்துக்கு இருந்ததால், வாக்காளர்கள் வாக்கு செலுத்த கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. பின்னர், தேர்தல் ஆணையம் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது.
திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். சுயேட்சையாக போட்டியிட்ட விவசாயிகள் பெரிய வாக்குகளை பெறாவிட்டாலும், தங்கள் தொகுதியை இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்க வைத்தனர்.