மிஸ் இந்தியா பட்டத்தை கைப்பற்றிய கர்நாடக அழகி

Miss Karnataka Sini Shetty has won the Miss India pageant.

Update: 2022-07-04 09:40 GMT

மிஸ் இந்தியா போட்டியில் கர்நாடகா அழகி சினி ஷெட்டி கைப்பற்றியுள்ளார்.




 

மிஸ் இந்தியா அழகி போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் அதில் வெற்றி பெற்று மிஸ் இந்தியாவாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்திய அழகி போட்டி மும்பையில் உள்ள ஜியோ கான்வகேஷன் சென்ட்ரலில் கோலாகலமாக நடைபெற்றது.




 

இந்த போட்டியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர், இவர்களில் கர்நாடகவைச் சேர்ந்த சினி ஷெட்டி என்பவர் மிஸ் இந்தியா'வாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 71 வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க சினி ஷெட்டி தேர்வாகியுள்ளார். இந்திய திரையுலகிற்கு அடுத்த கதாநாயகி கிடைத்துவிட்டார் என இப்பொழுதே சிலர் கூறி வருகின்றனர்.

Similar News