மருத்துவமனையில் செந்தில் பாலாஜி.. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அலறி துடித்த முதல்வர் ஸ்டாலின்..
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாக, அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் எப்படியாவது விசாரிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துடித்து வரும் வேளையில், மறுபுறம் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடைபெற்று முடிந்ததா? என்பதுதான் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணிநேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு அவர் இரவில் கைது செய்யப்படும் நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி வந்ததால் அவர் ஓமத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் மனைவி கேட்டுக்கொண்டதால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஆஞ்சியோ கிராம் செய்ததில் செந்தில் பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக அறிக்கை தகவல்கள் தெரிவிக்கப்பட்டன அதன் காரணமாக அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனால் பைபாஸ் சிகிச்சை அமைச்சருக்கு செய்யப்பட்டு உள்ளது.
காலையிலிருந்து அமைச்சருக்கு பைபாஸ் சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ச்சியான முறையில் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தது இது குறித்து உடனடியான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது சுகாதாரத்துறை அமைச்சரிடம் அப்டேட் கேட்டுட்டே இருந்திருக்கிறார். அதேபோல் மறுபுறம் சிகிச்சை முறைகளை அமலாக்கத்துறையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்தப்பக்கம் அமைச்சருக்கு நல்ல முறையில் சிகிச்சை நடைபெற்று முடிந்துவிட்டால் அவர் அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் எடுக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் இருக்கிறார். இதன் காரணமாக அறிவாலய வட்டாரங்கள் பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை போனில் தொடர்பு கொண்டு அமைச்சரின் சிகிச்சைகளைப் பற்றியும் அவர்கள் அவரின் உடல் நலத்தைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டு வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.