வெள்ளை மாளிகையே ஆடிப்போச்சு! இப்படி ஒரு வரவேற்பு அமெரிக்காவில் எந்த தலைவருக்கும் கிடைத்ததில்லை!
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
ராணுவ பேண்ட் மூலம் அமெரிக்க, இந்திய தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்திய அமெரிக்க உயர்மட்ட குழு அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார் பிரதமர் மோடி.
முன்னதாக பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் டி.சி. நகரில் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.எனினும், அவரை வரவேற்பதற்காக சீருடை அணிந்த ராணுவ வீரர்களின் இசை குழுவினர் தயாராக இருந்தனர். அவர்கள், இசை கருவிகளை இசைத்து அளித்த பாரம்பரிய முறைப்படி அவரை வரவேற்றனர்.கொட்டும் மழையிலும் பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் அளித்த வரவேற்பை ஏற்று கொண்டார்.
இந்தியாவும் அமெரிக்காவும் ஒவ்வொரு பகுதியிலும் தோளோடு தோள் சேர்ந்து நடந்து வருவதாக ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.