பேச்சை நிறுத்துடா! மலேசியாவில் திருமாவளவனை ரவுண்டு கட்டிய தமிழர்கள்: பேச்சை முடித்து பாதியில் ஓட்டம்!

Update: 2023-07-24 02:43 GMT

மலேசியா உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவனின் தமிழ் தேசியம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால் மாநாட்டில் பரபரப்பு நிலவியது.

மலேசியாவில் உள்ள உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21, 22, 23 தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், ஜூலை 21-ம் தேதி முதல் நாள் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்தியாவில் இருந்து வி.சி.க தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி-யுமான திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தமிழ்த் தேசியம் பற்றி பேசினார். அப்போது, சிலர் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் பேசி குரல் எழுப்பினர். இதனால், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் என்கிற அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மத அடையாளத்தைவிட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்று திருமாவளவன் பேசினார்.


Similar News