லஞ்சம் கேட்ட பேராசிரியர்!! புகாரியின் அடிப்படையில் பணியிடை நீக்கம்!! நடந்தது என்ன??
பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்று துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் வெங்கடேசன் அதே துறையில் பணியாற்றி வந்த பேராசிரியர் ஆர். சரவணன் என்பவர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவரை தற்பொழுது பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பின்னணியில் கல்லூரி தரப்பில் விசாரித்த பொழுது, வரலாற்று துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் நிரந்தரமான பணி பெறுவதற்கு மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தகுதி சான்றிதழ் மற்றும் உயர்கல்வி துறையில் அனுமதி கடிதம் தேவைப்பட்ட நிலையில், அதை சரவணன் பெற்று தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
மேலும் பணத்தை கொடுக்காவிட்டால் வெங்கடேசனின் பணி உடனடியாக பறிக்கப்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணனை விசாரித்த போது அவருடைய பதில் திருப்தி அளிக்காததால் அவரை பணியிடை நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவணன் ஏற்கனவே இதுபோன்று பல செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் மீது நிறைய புகார்கள் இருப்பதாகவும், இரண்டு முறை சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்தனர்.