மூன்று நாட்களில் ஜிஎஸ்டி பதிவு திட்டம்! கருத்து தெரிவித்த நிபுணர்கள்! இதனால் யாருக்கு அதிகமாக பயன்?

By :  G Pradeep
Update: 2025-11-03 07:53 GMT

மத்திய அரசு தற்பொழுது சிறு குறைந்த ஆபத்து கொண்ட தொழில்களுக்கு புதிதாக எளிதான ஜிஎஸ்டி பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தொழில்களுக்கு மூன்றுவேலை நாட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி பெறவும், மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை வரி செலுத்தும் தொழில்களுக்கு பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிய தொழில் முனைவோர்களுக்கு பதிவு செய்வதில் தாமதம் மற்றும் சிக்கல் குறைக்கப்படும் என்றும், இந்த தரவுகள் மூலம் குறைந்த ஆபத்து உடைய தொழில்கள் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக மாதாந்திர வரி பொறுப்பு இருக்கும் எனவும், அந்த வகையில் இருக்கும் நிறுவனங்கள் இதில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதில் சேர்ந்த தொழில்கள் மீண்டும் விலகவும் முடியும் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் குழு கடந்த செப்டம்பர் 3ம் தேதி அங்கீகாரம் அளித்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு இத்திட்டத்தை கொண்டு வந்து புதிய விண்ணப்பதாரர்களுக்கு 96% நன்மை இருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய வரித்துறைக்கு ஜிஎஸ்டி சேவை மையங்களில் ஹெல்ப் டெஸ்க்கள் அமைக்க உத்தரவிடப்பட்டார். 

இதைத்தொடர்ந்து வரி நிபுணர்கள் மற்றும் சிறு தொழில் சங்கங்கள் இத்திட்டத்தின் மூலம் நன்மை அடைந்தாலும் கூட இதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமானது என்றும், ஏற்கனவே செய்யப்பட்ட முயற்சிகளில் பலமுறை சிஸ்டம் கோளாறுகளும், தரவு சரிபார்ப்பு மற்றும் மாறுபட்ட விதிமுறைகள் போன்றவையால் சிரமம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனால் இதை முழுமையாக தானியக்க முறைமை மற்றும் பொறுப்புணர்வுக்கு கொண்டுவரும் வரை மூன்று நாளில் பதிவு என்கின்ற வாக்குறுதி சற்று கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News