தாயுமானவர் திட்டம் குறித்து புகார் அளிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள்!! பரவி வரும் செய்தி!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல்வரின் தாயுமானவர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காக ரேஷன் பொருட்களை முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறிது காலமே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 70,311 பேர் மாற்றுத்திறனாளிகளாகவும் மற்றும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களாக உள்ளனர். இந்நிலையில் அரசு 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்தது. இதன் கீழ் வருபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பணியாளர்கள் மின்னணு தராசில் எடை போட்டு வீட்டுக்களுக்கே சென்று பொருட்களை தர வேண்டும்.
ஆனால் இத்திட்டம் தொடங்கியதில் இருந்து புகார்கள் தான் வந்த பயமே இருக்கிறது என்றும் இதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 75 வயதாகிய முதியவர் ஒருவர் எனக்கு வீட்டுக்கே வந்து பொருட்கள் தருவதாக மெசேஜ் மட்டுமே வந்திருப்பதாகவும், பொருள் இன்னும் வராததால் நேரடியாக தானே கடைக்கு வந்துவிட்டு பொருள் வாங்கி செல்வதாகவும், இத்திட்டமானது தேர்தல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.