இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் முஸ்லிம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று பேட்டியில் கூறியதை தொடர்ந்து திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஹ்மானின் அறிக்கைக்கு பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கங்கனா ரனாவத், ஜாவேத் அக்தர், ஷான் போன்றவர்கள் ரஹ்மானின் அறிக்கையை கண்டித்துள்ளனர்.
இப்போது அந்த வார்த்தைகளுக்கு ரஹ்மான் விளக்கம் அளித்து, இசை எப்போதும் நமது கலாச்சாரத்தை இணைக்கவும், கொண்டாடவும், மதிக்கவும் எனக்கு ஒரு வழியாக இரந்து வருகிறது. இந்தியா எனது உத்வேகம், எனது ஆசிரியை மற்றும் எனது தாய்நாடு என்று கூறியுள்ளார்.
மேலும் ரஹ்மான் சமூக ஊடகங்களில் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது பேட்டி யாரையும் புண்படுத்தும் நோக்கதில் இல்லை எனவும், இந்தியா எனது வீடு, இங்கேயே நான் இசை கற்றேன் என்றும் கூறியுள்ளார்.