மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!! விமான நிலையத்தில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு!!

Update: 2026-03-07 06:19 GMT

மும்பை உயர் நீதிமன்றத்தில் டாக்ஸி ரிக்சா ஓலா-உபேர் ஆண்கள் டிரைவர் யூனியன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விமான நிலைய வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தொழுகை நடத்த அனுமதி கோரப்பட்டது.


நீதிபதிகள் பி.பி.கொலபாவாலா, பிர்தோஷ் பூனிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொண்டு, விமான நிலையம் எதிரே உள்ள பகுதியில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.


மதம் அல்லது வேறு எந்த விஷயமோ பாதுகாப்புதான் முதலில் வருகிறது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

Similar News