வளைவு நெளிவு இல்லாமல் சீரான போக்குவரத்திற்கு திட்டம்! ரூ.1800 கோடியில் மதுக்கரை மற்றும் நீலாம்பூர் பைபாஸ் ரோடு!
கோவை மதுக்கரை மற்றும் நீலாம்பூர் பைபாஸ் ரோடு ரூ.1800 கோடி செலவில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பிரதான பைபாஸ் சாலையாக அமைந்திருக்கும் இந்தப் பகுதியானது கடந்த 1999 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலையானது கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் பாதையாக இருந்து வந்தது. இதில் 5 இடங்களில் சுங்க கட்டணம் வசூல் நிலையங்கள் உள்ள நிலையில் மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டது.
இந்த சாலையில் வாகன நெரிசலானது அதிகமானதை தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகிறது. இதனால் நெடுஞ்சாலை ஆணையகம் இந்த பைபாஸ் சாலையை விரிவாக்கம் செய்ய திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டது. இதில் 26.2 கி.மீ தூரம் அளவிற்கு பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்வதற்கு ரூ.1800 கோடி செலவாகுவதற்கு வாய்ப்பு இருக்கும் நிலையில் கூடுதலாக 10% தொகையும் தேவைப்பட வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டப் பாதையில் 12 மேம்பாலம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், google எர்த் மூலமாக சில தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய இறுதி கட்ட எனது விரைவில் வெளியாகும் என்றும், அதன் பிறகு சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்பொழுது அந்தப் பகுதியில் இருக்கும் சாலையை தரம் உயர்த்தி அதன் பிறகு அதே தரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை விரைவில் நடத்துவதற்கான ஆய்வுகளை கோவை கோட்ட நெடுஞ்சாலை ஆணையத்தின் கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மேற்கொண்டு வருகிறார்.