இந்திய விண்வெளித் துறையில் வரப்போகும் 2 லட்சம் வேலைவாய்ப்பு!! அடெக்கோ நிறுவனம் ஆய்வு!!
அடுத்த 8 வருடத்தில் இந்திய விண்வெளித் துறையின் மதிப்பானது ஐந்து மடங்கு அதிகரித்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு வாய்ப்பிருப்பதாக அடெக்கோ நிறுவனம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனமானது வரும் 2023ம் ஆண்டிற்குள் ஏரோஸ்பேஸ், ஆளில்லா விமானங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத் துறை 5 மடங்கிற்கு மேல் வளர்ச்சி பெற போவதாகவும், தற்பொழுது உலக சந்தையில் இதனுடைய பொருளாதாரமானது 2% பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் 2033 ஆம் ஆண்டிற்குள் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும்.
இந்திய மதிப்பின்படி ரூ.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் அதற்கான வழிமுறைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், ஒரு லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதி சார்ந்தவையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவானது 7%லிருந்து 8% வரை இந்திய விண்வெளி பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதன் மூலம் பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள் உட்பட 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். ககன்யான் பணி, ஆக்சியம்-4 ஐஎஸ்எஸ் போன்ற திட்டத்தால் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களின் தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வளர்ந்து வரும் இந்தத் துறையானது ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், புனே மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.