பெட்ரோலில் 20% எத்தனால் இருப்பதாக பிறப்பிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!!

Update: 2025-09-02 10:50 GMT

 இன்றைக்கு நாடு முழுவதும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் பல வாகனங்கள் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை என்றாலும், வாகனங்களை வைத்திருக்கும் அனைவருமே எத்தனால் கலந்த பெட்ரோலையே பயன்படுத்த வேண்டி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் முன்னிலையில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த மனுவில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எத்தனால் இல்லாத பெட்ரோல் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு உத்தரவு பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் வாங்கும் அனைவருக்கும் தெரியும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எத்தனால் கலப்பு குறித்து தெரியப்படுத்தி நுகர்வோரின் வாகனங்களில் எத்தனால் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தன்மையினை தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

இவ்வழக்கின் விசாரணையின்போது மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எத்தனால் கலந்த பெட்ரோல் பொது விழிப்புணர்வு இல்லாமல் தற்பொழுது எளிதாக கிடைக்கக்கூடிய கட்டாய விருப்பமாக மாறிவிட்டது என்றும், விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அரசு உரிய ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், நாம் எந்த வகையான பெற்றோலை பயன்படுத்த வேண்டும் என்று யாரோ ஒருவர் நாட்டுக்கு வெளியில் இருந்து ஆணை இடுகிறார்களா?? என்றவாறு கேள்வியை எழுப்பினார். 

மேலும் இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் பேசினார். இந்த நிலையில் தற்பொழுது நீதிமன்றம் இந்த மனுவை ஏற்க மறுத்து உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் தள்ளுபடி செய்துள்ளது. 

Tags:    

Similar News