இந்தியாவில் எல்லை ஊடுருவல்: 2014 முதல் 23,926 பேர் கைது!!

By :  G Pradeep
Update: 2025-12-17 07:56 GMT

2014-ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவுக்குள் ஊடுருவியதாக 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். 2014 முதல் 2024 வரை வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், நேபாளம் - பூடான் ஆகிய நாடுகளுடனான எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் 20,806 பேர் ஊடுருவியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 3,120 பேர் ஊடுருவியுள்ளனர். இந்தியாவின் எல்லைகள் பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான், நேபாளம், பூடான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படைகள் எல்லை ஊடுருவலை தடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

Tags:    

Similar News