மோடி அரசின் அமிர்த ஏரிகள் இயக்கம்: தமிழ்நாட்டில் புனரமைக்கப்பட்ட 2,484 நீர் நிலைகள்!
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி அமிர்த ஏரிகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை அமைப்பது அல்லது புணரமைப்பது மற்றும் ஐம்பதாயிரம் ஏரிகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்த அமிர்த ஏரிகள் இயக்கத்தின் முதல் கட்டத்தில் 68 ஆயிரத்திற்கும் அதிகமான நீர் நிலைகள் கட்டப்பட்டு அல்லது புணரமைக்கப்பட்டு அதன் இலக்கை கடந்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் 2,484 நீர் நிலைகள் புணரமைக்கப் பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்முயற்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரங்களை அதிகரிக்க உதவுவதுடன் நீர் பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இயக்கம் உடனடி தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், நீடித்த நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது. இத்தகைய முயற்சிகள் நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும், சமுதாய நலனை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.